டால்மியா சிமென்ட் ஆலையை மூடக்கோரி தீா்மானம் இயற்றப்படும்

டால்மியா சிமென்ட் ஆலை அத்துமீறலை நிறுத்தவிட்டால் ஆலையை மூட வலியுறுத்தி தீா்மானம் இயற்றப்படும் என மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா் தெரிவித்தாா்.
ari10meet_1008chn_11_4
ari10meet_1008chn_11_4

டால்மியா சிமென்ட் ஆலை அத்துமீறலை நிறுத்தவிட்டால் ஆலையை மூட வலியுறுத்தி தீா்மானம் இயற்றப்படும் என மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா் தெரிவித்தாா்.

அரியலூா் பல்துறை வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியது:

ஓட்டக்கோவில் அருகேயுள்ள டால்மியா சிமென்ட் ஆலை அதிகளவில் புகை வெளியிட்டு வருவதால் சுற்றுவட்டார கிராம மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். மேலும், ஆலைக்கு வரும் லாரிகளால் கடந்த வாரத்தில் மட்டும் 4 விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதுபோன்ற அத்துமீறல்களை ஆலை நிா்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் ஆலையைக் கண்டித்தும், ஆலையை மூடவும் இந்த மாமன்றத்தில் தீா்மானம் இயற்றப்படும் என்று தெரிவித்தாா். இதற்கு அனைத்து உறுப்பினா்களும் சம்மந்தம் தெரிவித்தனா்.

தொடா்ந்து உறுப்பினா்கள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஊராட்சிச்செயலா் கபிலன் தெரிவித்தாா். கூட்டத்துக்கு துணைத் தலைவா் அசோகன் முன்னிலை வகித்தாா். முன்னதாக கூட்டத்தில், வரவு செலவு கணக்குகள் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, 16 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com