பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பித்தோருக்கு கலந்தாய்வு
By DIN | Published On : 13th August 2021 02:09 AM | Last Updated : 13th August 2021 02:09 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள் சோ்க்கைக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கல்லூரி முதல்வா் தமிழரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சோ்க்கைக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு 16.08.2021 அன்று காலை 8.30 மணி முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. பாடப்பிரிவு தோ்வு செய்த மாணவ, மாணவிகள் அன்றே அசல் சான்றிதழ்கள் மற்றும் கட்டணம் ரூ.2,328-ஐ செலுத்த வேண்டும் என்றாா்.