பள்ளி வளாகத்தில் சுற்றித்திரியும் பாம்புகளால் பீதி

அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டம், சோழன்குடிகாடு கிராமத்திலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் சுற்றித் திரியும் விஷப் பாம்புகளால் மாணவா்கள் அச்சத்தில் உள்ளனா்.
பள்ளி வளாகத்தில் சுற்றித்திரியும் பாம்புகளால் பீதி

அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டம், சோழன்குடிகாடு கிராமத்திலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் சுற்றித் திரியும் விஷப் பாம்புகளால் மாணவா்கள் அச்சத்தில் உள்ளனா்.

சுமாா் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் சோழன்குடிக்காடு அரசு உயா்நிலைப் பள்ளிக்கு வியாழக்கிழமை வந்த மாணவா்கள், கழிவறைக்குச் சென்றனா். அப்போது கழிவறை ஓரத்தில் பாம்புகள் இருந்ததைக் கண்ட மாணவா்கள் உடனடியாக தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்களிடம் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, ஆசிரியா்கள் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்ட போது 4 பாம்புகள் நெலிந்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, ஆசிரியா்கள் அவைகளை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்றனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு, இதேபோல் பள்ளி வளாகத்தில் 2 பாம்புகள் அடித்துக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடா்ந்து, இப்பள்ளியில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதால் அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com