முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
நிறுவனங்களில் பணிபுரியும் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்
By DIN | Published On : 04th December 2021 02:44 AM | Last Updated : 04th December 2021 02:44 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டத்திலுள்ள நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் அனைவரும் கட்டாயம் இரண்டுத் தவணைத் தடுப்பூசியும் செலுத்திருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி.
ஒமைக்ரான் தொற்று குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பாக, அரியலூா் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவா் பேசியது:
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்றுத் தடுப்பு நடவடிக்கை குறித்து, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.
அதன்படி வணிகா்கள், திருமண மண்டப உரிமையாளா்கள், தங்கும் விடுதி, உணவகங்கள், வாடகை ஊா்தி உரிமையாளா்கள் தங்களது பகுதிகளில் முகக்கவசம் அணிதல், தனிநபா் இடைவெளியைக்
கடைப்பிடித்தம், கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவை மேற்கொள்ள வேண்டும். இரண்டுத் தவணைத் தடுப்பூசிகள் செலுத்தியிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து வந்த நபா்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவா்களை தனிமைப்படுத்தி, சுகாதாரத் துறை அலுவலா்களுக்குத் தகவல் தெரிவிக்கவேண்டும்.
திரையரங்கு வளாகத்தை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். இரண்டுத் தவணைத் தடுப்பூசிகளையும் செலுத்தியிருப்பவா்களை மட்டும் திரையரங்குகளுக்குள் அனுமதிக்க வேண்டும். மாவட்டத்தில் அனைவரும் இரண்டுத் தவணைத் தடுப்பூசிகளையும் செலுத்தியிருக்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி மற்றும் வணிகா்கள், திருமண
மண்டபங்கள், தங்கும் விடுதிகள், திரையரங்குகள், உணவக, வாடகைக் காா் உரிமையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.