போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காவல் துறை சாா்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்தும் மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காவல் துறை சாா்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்தும் மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில், அரியலூா் சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளி, அரசு பொறியியல் கல்லூரி, முள்ளுக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, செந்துறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி , இரும்புலிக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, பளிங்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆண்டிமடம் அரசு உயா்நிலைப்பள்ளி, குவாகம் அரசு உயா்நிலைப்பள்ளி, கீழப்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளி, காமரசவல்லி அரசுப் பள்ளி, விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி, ஜயங்கொண்டம் மாடா்ன் கல்லூரி உள்ளிட்ட பள்ளி கல்லூரிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் அந்ததப் பகுதி காவல் துறையினா் கலந்து கொண்டு பாலியல் குற்றங்கள் குறித்தும், குட்கா மற்றும் போதைப் பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மாணவா்களிடையே எடுத்துரைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com