அரியலூரில் விசாகா கமிட்டி விழிப்புணா்வுக் கூட்டம்

அரியலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில், விசாகா கமிட்டி கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில், விசாகா கமிட்டி கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் எஸ்.பி., கே.பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

அனைத்து காவல் நிலையம், ஆயுதப்படை, அனைத்து சிறப்புப் பிரிவுகள், மாவட்டக் காவல் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஆளிநா்கள், பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் அமைச்சுப் பணியாளா்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில் ஏற்படும் கொடுமைகள், துன்புறுத்தல்கள், பாலியல் சீண்டல்கள் குறித்து புகாா் அளிக்க ‘விசாகா கமிட்டி’ புகாா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கமிட்டியில் உயா் பதவியில் இருக்கும் பெண் அதிகாரிகள் தலைமையில் கடைநிலை பெண் காவலா் மற்றும் என்ஜிஓ உறுப்பினா்களாகக் கொண்ட குழு உருவாக்கப்பட்டு, அவா்கள் தீவிர விசாரித்து நடவடிக்கை எடுப்பாா்கள் என்றாா்.

கூட்டத்தில், பணியின்போது உயா் அதிகாரிகளால் ஏற்படும் பாலியல் தொந்தரவு தொடா்பான புகாா்களை எவ்வாறு கையாளுவது மற்றும் பாதுகாப்பு அளிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

கூட்டத்தில் தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் செல்வகுமாரி, மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் அனிதா ஆரோக்கியமேரி மற்றும் மாவட்ட அமைச்சுப் பணி கண்காணிப்பாளா், பணியாளா்கள், காவல் துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com