770 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.41.01 கோடி கடனுதவி

திருவள்ளூா் மாவட்டம், அரியலூா் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 770 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.41.01 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
770 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.41.01 கோடி கடனுதவி

திருவள்ளூா் மாவட்டம், அரியலூா் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 770 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.41.01 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியில் 5 மாவட்டங்களைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு கடனுதவி வழங்குதலை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து அரியலூா் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்டத்திலுள்ள 770 மகளிா் சுய உதவிக்குழுக்களைச் சோ்ந்த 9,243 உறுப்பினா்களுக்கு ரூ.41.01 கோடி மதிப்பில் கடனுதவிகளை ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு.சின்னப்பா,ஜயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவா் பொ.சந்திரசேகா், ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலா் சிவக்குமாா், ஒன்றியக்குழுத்தலைவா் செந்தமிழ்செல்வி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் லியோனியல்பெனடிக்ட், மாவட்டத் தொழில்மையப் பொது மேலாளா் லட்சுமி மற்றும் அரசு அலுவலா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com