முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
மாசற்ற அலுவலக வாரம்: சைக்கிளில் சென்று ஆய்வு செய்த சுகாதார துணை இயக்குநர்
By DIN | Published On : 15th December 2021 03:22 PM | Last Updated : 15th December 2021 03:23 PM | அ+அ அ- |

மாசற்ற அலுவலக வாரத்தையொட்டி அரியலூரில் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓட்டக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மிதிவண்டியில் செல்லும் சுகாதார பணிகள் துணை இயக்குநர் கீதா ராணி.
அரியலூர்: மாசற்ற அலுவலக வாரத்தையொட்டி அரியலூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி தனது மிதிவண்டியில் சென்று கரோனா தடுப்பூசி செல்லும் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்தார்.
அரியலூரிலிருந்து சுமார் 7 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஓட்டக்கோவில் கிராமத்துக்கு சென்று, அங்குள்ள துணை சுகாதார நிலையத்தில் நடைபெற்ற வந்த தடுப்பூசி செலுத்தும் பணியினை பார்வையிட்ட அவர், நாள் முழுவதும் மிதிவண்டியில் சென்று தனது பணிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த திங்கள்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.