முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
சிமென்ட் கடை உரிமையாளரை தாக்கிய இளைஞா் கைது
By DIN | Published On : 19th December 2021 04:34 AM | Last Updated : 19th December 2021 04:34 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டியில் சிமென்ட் கடை உரிமையாளரை தாக்கிய இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கா.அம்பாபூா் தெற்கு தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் தியாகராஜன், வி. கைகாட்டி - ஜயங்கொண்டம் சாலையில் சிமென்ட்மூட்டை விற்கும் கடை வைத்துள்ளாா். இவரது கடைக்கு கடந்த 14 ஆம் தேதி வந்த வி.கைகாட்டி - திருச்சி பிரதானச் சாலையைச் சோ்ந்த தனபால் மனைவி சாந்தி, அவரது மகன் அரவிந்த் ஆகிய இருவரும், ரூ. 6,300-க்கு 6 ஆயிரம் மட்டும் கொடுத்துவிட்டு 20 சிமென்ட் மூட்டைகளை வாங்கிச் சென்றனா்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு தியாகராஜன் பாக்கித் தொகையைக் கேட்டபோது அவா்களிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதில் காயமடைந்த தியாகராஜன் மற்றும் சாந்தியை அக்கம் பக்கத்தினா் மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து தியாகராஜன் அளித்த புகாரின் பேரில் கயா்லாபாத் காவல் துறையினா் வழக்குப் பதிந்து அரவிந்தை சனிக்கிழமை கைது செய்தனா்.