முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
‘இடைநிலை ஆசிரியா்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்’
By DIN | Published On : 19th December 2021 11:37 PM | Last Updated : 19th December 2021 11:37 PM | அ+அ அ- |

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் நீடித்துவரும் இடைநிலை ஆசிரியா்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலச் பொதுச் செயலா் ரெங்கராஜன் தெரிவித்தாா்.
அரியலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சனிக்கிழமை வந்திருந்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில பொதுச் செயலா் ரெங்கராஜன், செய்தியாளா்களிடம் கூறியது:
அரசு ஆவணங்களில் தமிழில் பெயா் எழுதும்போது முன்னெழுத்து தமிழில் இருக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடலாக அறிவித்து உத்தரவுகளை வெளியிட்டுள்ள தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.
சம வேலைக்கு சம ஊதியம் கோட்பாட்டின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியா் ஊதிய முரண்பாட்டை முற்றிலுமாக களைதல் வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வரும் இடைநிலைஆசிரியா்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தை அகற்றிவிட்டு 2003-க்குப் பிறகு நியமனம் பெற்ற ஆசிரியா்களுக்கும், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைபடுத்த வேண்டும் என்றாா்.