கோயில் உண்டியலை உடைத்து 5 பவுன், ரூ. 20 ஆயிரம் திருட்டு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கோயில் உண்டியலை உடைத்து நகை மற்றும் பணத்தைத் திருடிச்சென்ற நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கோயில் உண்டியலை உடைத்து நகை மற்றும் பணத்தைத் திருடிச்சென்ற நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

செந்துறை அடுத்த மருதூா் தெற்குப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் அதே கிராமத்தைச் சோ்ந்த சாந்தி(45) என்பவா் பூஜை செய்து வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இவா், பூஜை முடித்துவிட்டு கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டாா்.

பின்னா் அவா், சனிக்கிழமை காலை கோயிலுக்கு வந்து பாா்த்தபோது கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிா்ச்சியடைந்தாா். உண்டியலில் 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.20,000 பணம் இருந்ததாக செந்துறை காவல் நிலையத்தில் சாந்தி புகாா் அளித்தாா். அதன் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com