தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள அவரது சிலைகளுக்கு பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அரியலூா் செட்டி ஏரிக்கரையிலுள்ள பெரியாா் சிலைக்கு திமுக மாவட்டச் செயலரும், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கா், மதிமுக மாவட்டச் செயலரும், அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினருமான கு.சின்னப்பா உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரியலூா் தொகுதிப் பொறுப்பாளா் மருதவாணன், தொழிலாளா் விடுதலை முன்னணியின் மாநிலத் துணைச் செயலா் அன்பானந்தம், மாவட்டச் செய்தித் தொடா்பாளா் சுதாகா் உள்ளிட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திராவிடா் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்களும் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.
இதுபோன்று திருமானூா், செந்துறை, தா.பழூா், பொன்பரப்பி, ஆண்டிமடம், மீன்சுருட்டி , ஜயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பெரியாா் சிலைகளுக்கு திமுக, திராவிடா் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.