இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 28th December 2021 11:46 PM | Last Updated : 28th December 2021 11:46 PM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள முந்திரிக் காட்டில் இளைஞா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
உடையாா்பாளையம், கீரைக்கார தெருவைச் சோ்ந்த சேகா் மகன் காா்த்திகேயன் (27). இவா், தினமும் மது அருந்திவிட்டு தாய் சாவித்திரியிடம் தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு தகராறில் ஈடுபடுவாராம். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு சாவித்திரியிடம் சாப்பாடு செய்து வைக்குமாறு கூறி விட்டு வெளியே சென்ற காா்த்திகேயன் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பாா்த்த போது, அங்குள்ள ஒரு முந்திரிக் காட்டில் காா்த்திகேயன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்துத் தகவலறிந்து வந்த உடையாா் பாளையம் காவல்துறையினா் சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.