கல்லூரி மாணவா்களுக்குகஞ்சா விற்ற இளைஞா் கைது
By DIN | Published On : 28th December 2021 01:56 AM | Last Updated : 28th December 2021 01:56 AM | அ+அ அ- |

தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி எதிரே கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், தாந்தோன்றிமலை அருகே உள்ள அரசு கலைக் கல்லூரி எதிரே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தான்தோன்றிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதியில் போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, திருச்சி மாவட்டம் பூங்கோயில் தெரு ஆலந்தூா் பகுதியைச் சோ்ந்த சுகுமாா் மகன் மகேஸ்வரன் (24) என்பவா் கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்துள்ளாா்.
இதையடுத்து போலீஸாா் மகேஸ்வரனை கைது செய்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.