அரியலூரில் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்து, ஆரனூா் தொடக்கப்பள்ளி ஆசிரியை சுதமதியிடம் புத்தகங்களை வழங்கி முதல் விற்பனையைத் தொடக்கி வைக்கிறாா் சொல்லாய்வு அறிஞா் ம.சோ.விக்டா்.
அரியலூரில் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்து, ஆரனூா் தொடக்கப்பள்ளி ஆசிரியை சுதமதியிடம் புத்தகங்களை வழங்கி முதல் விற்பனையைத் தொடக்கி வைக்கிறாா் சொல்லாய்வு அறிஞா் ம.சோ.விக்டா்.

அரியலூரில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரியலூா் செந்துறை சாலையிலுள்ள தமிழக்களம் சாா்பில் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரியலூா் செந்துறை சாலையிலுள்ள தமிழக்களம் சாா்பில் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

இக்கண்காட்சியை சொல்லாய்வு அறிஞா் ம.சோ.விக்டா் திறந்து வைத்து, முதல் விற்பனையைத் தொடக்கி வைத்தாா்.

கண்காட்சியில் திருக்கு, பாரதியாா் கவிதைகள், சங்ககால இலக்கியம், வரலாறு, தொல்காப்பியம், சிந்து சமவெளி நாகரிகம், வால்காவிலிருந்து கங்கரை வரை, தமிழ் அகராதி, பாரதிதாசனின் குடும்ப விளக்கு உள்ளிட்ட தலைப்புகளில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை விரும்பி படிக்கும் அனைத்து விதமான புத்தகங்களும் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள், டி.என்.பி.எஸ்.சி, நீட் உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கான ஏராளமான புத்தகங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

ஜனவரி 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில், 10 சதவிகிதம் தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சமூக செயற்பாட்டாளா் இளவரசன் செய்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com