முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருள்கள்: ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 31st December 2021 04:04 AM | Last Updated : 31st December 2021 04:04 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்திலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக செயல்முறை கிடங்கிற்கு வரப்பெற்றுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு மளிகைப் பொருள்களை ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி புதன்கிழமை மாலை ஆய்வு செய்தாா்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு மளிகை பொருள்களின் தரம், தயாரிப்பு தேதி மற்றும் பொருள்களின் காலாவதி தேதி ஆகியவற்றை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, மண்டல மேலாளா் எம்.பாலமுருகன், வட்டாட்சியா் ஆனந்தன், வட்ட வழங்கல் அலுவலா் ஜானகிராமன் ஆகியோா் உடனிருந்தனா்.