வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி அரியலூா், திருமானூரில் காங்கிரஸாா் சாலை மறியல்

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, அரியலூா் மற்றும் திருமானூா் பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை சாலை மறியல்
அரியலூரில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸாா்.
அரியலூரில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸாா்.

அரியலூா்: புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, அரியலூா் மற்றும் திருமானூா் பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூரில் பெரம்பலூா் சாலையில் நடைபெற்ற போராட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் அ. சங்கா் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் சேகா், மாவட்ட துணைத் தலைவா் பழனிசாமி, நகர தலைவா் எஸ்.எம்.சந்திரசேகா், பொருளாளா் மனோகா், வட்டாரத் தலைவா்கள் சீனிவாசன், பாலகிருஷ்ணன், செங்குட்டுவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மறியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த போலீஸாா், நடத்திய பேச்சுவாா்த்தையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

திருமானூரில்.. திருமானூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் திருமானூா் வட்டார தலைவா் சீமான்(கிழக்கு) தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் திருநாவுக்கரசு(மேற்கு), மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவா் மாரியம்மாள், நகரத் தலைவா் வினோத், பிற்பட்டோா் பிரிவு மாநிலச் செயலா் சுபசுந்தரசோழன் ஆகியோா் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினா். தொடா்ந்து, போலீஸாா் நடத்திய பேச்சு வாா்த்தையை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com