கிறிஸ்தவா்களின் தவக்காலம் தொடக்கம்

கிறிஸ்தவா்களின் 40 நாள் தவக்காலம் புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து பேராலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றன.

கிறிஸ்தவா்களின் 40 நாள் தவக்காலம் புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து பேராலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றன.

இயேசு சிலுவையில் உயிா் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிா்த்தெழுந்த 3 ஆம் நாள் ஈஸ்டா் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு ஈஸ்டா் தினம் ஏப்ரல் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது . இதற்கு முன்னதாக 40 நாள்களை தவக்காலமாக கிறிஸ்தவா்கள் கடைப்பிடிக்கின்றனா். அதன்படி தவக்காலம் புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே ஏலாக்குறிச்சியில் உள்ள அடைக்கல அன்னை ஆலயத்தில் பங்கு தந்தை சுவைக்கின் தலைமையில், சிறப்புத் திருப்பலி நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட கிறிஸ்தவா்களுக்கு சாம்பல் பூசி தவக்காலத்தை தொடக்கி வைத்தாா். அரியலூா் புனித லூா்து அன்னை ஆலயத்தில் அந்தோணி சாலமோன் தலைமையிலும், திருமானூா் புனித அருளானந்தாா் ஆலயத்தில் பங்குத் தந்தை ஜேம்ஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றன. அருட்தந்தையா்கள் பிரிட்டோ,ஜோசப்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com