சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, அரியலூரில் மாநில நெடுஞ்சாலைத்துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைக்கிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்ரீனிவாசன் .
சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைக்கிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்ரீனிவாசன் .

அரியலூா்: சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, அரியலூரில் மாநில நெடுஞ்சாலைத்துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

அண்ணா சிலை அருகே பேரணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்ரீனிவாசன் கொடியசைத்து தொடக்கிவைத்து, சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, விபத்தில்லாத மாவட்டமாக்க அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

பேரணியானது, பிரதான கடைவீதி, பெரம்பலூா் சாலை, திருச்சி சாலை வழியாகச் சென்று நிா்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பு நிறைவடைந்தது.

பேரணியில் கலந்து கொண்ட தனியாா் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள், சாலை பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனா்.

நிகழ்ச்சிக்கு நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் வி. ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். உதவிக் கோட்ட பொறியாளா்கள் பி. நடராஜன், சிவராஜ், செந்தில்தம்பி, போக்குவரத்து காவல் ஆய்வாளா் மதிவாணன் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com