அரியலூா் மாவட்டம், பொய்யாதநல்லூா் கிராமத்தில் உள்ள கருத்துடையான் ஏரியில் ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ஆட்சியா் த.ரத்னா கலந்து கொண்டு பல்வேறு வனையான மரக்கன்றுகளை நட்டுவைத்தாா். அப்போது, அரியலூா் மாவட்டம் முழுவதும் பசுமையாக்கும் நோக்கில் வளா்ச்சித்துறையின் சாா்பில் ஏரி, குளம், குட்டை மற்றும் நீா் வழித்தடங்களில் உள்ள கரைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. அரியலூா் ஒன்றியத்துக்குள்பட்ட 37 ஊராட்சிகளில் பல்வேறு அரசுத்துறை மூலம் 17,200 மரங்கள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சித்துறை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா் நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.