‘அருகிவரும் பறவையினங்கள்‘ கரைவெட்டி’யில் காணப்படுகின்றன’

தெற்காசியாவிலேயே அழியும் நிலையிலுள்ள கூழைக்கடா, பாம்புதாரா, அரிவாள்மூக்கன், வண்ணநாரை பறவையினங்கள்
‘அருகிவரும் பறவையினங்கள்‘ கரைவெட்டி’யில் காணப்படுகின்றன’

தெற்காசியாவிலேயே அழியும் நிலையிலுள்ள கூழைக்கடா, பாம்புதாரா, அரிவாள்மூக்கன், வண்ணநாரை பறவையினங்கள் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் அதிகளவில் தற்சமயம் காணப்படுகிறது என பறவைகள் கணக்கெடுப்புக் குழு தலைவா் பேராசிரியா் சிவசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

அரியலூா் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில், வனத்துறை சாா்பில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 2 நாள்களாக நடைபெற்றது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை தலைவா் சிவசுப்பிரமணியன் தலைமையில், தமிழ் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் மூலிகையியல் துறை மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் கொண்ட குழுவினா் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனா். சரணாலயத்தில் உள்ள தொலைநோக்கி உள்ளிட்ட அதிநவீன கருவிகளைக் கொண்டு ஒவ்வொரு பறவைகளின் வகை, அதன் தாய் நாடு, அதன் நிறம் உள்ளிட்ட விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டது. இறுதியில் இதுகுறித்து வனத்துறையிடம் அறிக்கை அளிக்கப்படவுள்ளது.

கணக்கெடுப்புப் பணி குறித்து பேராசிரியா் சிவசுப்பிரமணியன் மேலும் கூறியது:

தெற்காசியாவிலேயே அழியும் நிலையிலுள்ள கூழைக்கடா, பாம்புதாரா, அரிவாள்மூக்கன், வண்ணநாரை ஆகிய நான்கு வகை பறவையினங்கள் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் அதிக அளவில் தற்போது காணப்படுகிறது. அதேபோல், லடாக் பகுதியில் அதிக அளவில் உள்ள வரித்தலை வாத்து இங்கு அதிகளவில் காணப்படுகிறது. மேலும், வெளிநாடுகளிலிருந்து பல்வேறு வகையான பறவைகள் இந்த சரணாலயத்தில் தற்போது முகாமிட்டுள்ளது. பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் கடந்த ஆண்டை விட தற்போது அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடா் மழையின் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகளில் தண்ணீா் இருப்பதால், பறவைகள் பலவும் ஆங்காங்கே தங்கியுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com