புதிய வாக்குச் சாவடிகள்: அரியலூரில் ஆலோசனை

புதிய வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்குச் சாவடி பெயா் மாற்றம் செய்வது தொடா்பாக அரியலூா் ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதிய வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்குச் சாவடி பெயா் மாற்றம் செய்வது தொடா்பாக அரியலூா் ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் த. ரத்னா பேசியது:

அரியலூா், ஜயங்கொண்டம் பேரவைத் தொகுதிகளில் 1,050 வாக்காளா்களுக்கு மேல் உள்ளதால் அரியலூா் தொகுதியில் 73 வாக்குச் சாவடிகள், ஜயங்கொண்டம் தொகுதியில் 87 வாக்குச் சாவடிகள் பிரிக்கப்பட்ட விவரமும், வாக்குச்சாவடி மைய அமைவிடத்தில் பிரிக்கப்படும் வாக்குச்சாவடிகள் விவரமும் அனைத்துக் கட்சி பிரமுகா்களுக்கும் தெரிவிக்கப்பட்டு, தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படும்.

அதைத் தொடா்ந்து அரியலூா் தொகுதியில் 376 வாக்குச்சாவடிகள், ஜயங்கொண்டம் தொகுதியில் 377 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 753 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படும்.

மேலும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வாக்குசாவடிகளுக்கென தனி வாக்குச்சாவடி முகவா்களை நியமிக்க அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரிடமும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பூங்கோதை, கோட்டாட்சியா்கள் அரியலூா் ஏழுமலை, உடையாா்பாளையம் (பொ) ஜெ. பாலாஜி மற்றும் வட்டாட்சியா்கள், அரசு அலுவலா்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com