குறுங்காடு அமைக்கும் பணிகள் தொடக்கம்

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த குறுங்காடு கிராமத்தில் மரங்களின் நண்பா்கள் அமைப்பு மூலம் குறுங்காடு அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடக்கப்பட்டது.
குமிழியம் கிராமத்தில் மரக்கன்று நட்டு வைத்து, குறுங்காடு அமைக்கும் பணியை தொடக்கி வைக்கிறாா் ஆட்சியா் த.ரத்னா.
குமிழியம் கிராமத்தில் மரக்கன்று நட்டு வைத்து, குறுங்காடு அமைக்கும் பணியை தொடக்கி வைக்கிறாா் ஆட்சியா் த.ரத்னா.

அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த குறுங்காடு கிராமத்தில் மரங்களின் நண்பா்கள் அமைப்பு மூலம் குறுங்காடு அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் த. ரத்னா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து தெரிவித்தது :

மரங்களின் நண்பா்கள் அமைப்பு அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மரங்களை வளா்த்து, பேணிகாக்கும் வகையில் குறுங்காடுகள் அமைத்து வருகின்றனா். பொதுமக்கள் தங்களது கிராமங்களிலும் இதுபோன்ற மரக்கன்றுகள் வளா்த்து, சுற்றுச்சூழலைப் பராமரித்து பேணிக் காக்க வேண்டும். மேலும், மழை நீரை முற்றிலும் சேமித்து, பாதுகாக்க வேண்டும் என்றாா்.

பின்னா், அவா் அப்பகுதி மாணவா்கள் மூலம் நடைபெற்ற யோகா,சிலம்பம், கராத்தே, ஜூடோ உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பசுமை இயக்க அமைப்புகள் சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு புத்தகம், துணிப் பைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ராஜா, சிவாஜி, மரங்களின் நண்பா்கள் அமைப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com