ஏரியில் சூழ்ந்துள்ள பாசிகளை அகற்றும் இளைஞா்கள்

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே ஏரியில் படா்ந்துள்ள பாசிகளை அகற்றும் பணியில் இளைஞா்கள் கடந்த இரண்டு நாள்களாக ஈடுபட்டு வருகின்றனா்.
சேடக்குடிக்காடு கிராமத்திலுள்ள ஏரியில் பாசியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞா்கள்.

செந்துறை அருகிலுள்ள சேடக்குடிக்காடு கிராமத்தில் 2 ஏக்கா் பரப்பளவைக் கொண்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மாடுதிருப்புஏரி உள்ளது. இந்த ஏரியில் நிகழாண்டு அசோலாவகை பாசி வளா்ந்து, ஏரியை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. இதனால் ஏரிக்குள் மக்கள் இறங்கக்கூட வழியில்லாது காணப்பட்டது.

இதைகண்ட கிராம இளைஞா்கள் 10- க்கும் மேற்பட்டோா் கடந்த இரண்டு நாள்களாக பாசிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனா். புதன்கிழமை செந்துறை பகுதியில் காலை முதல் அவ்வப்போது மழை பெய்ததால், பாசியை அப்புறப்படுத்தும் பணியை நிறுத்தினா்.

தொடா்ந்து 3, 4 நாள்கள் பாசியை அப்புறப்படுத்தினால் ஏரி முழுவதும் தூய்மையாகிவிடும் என இளைஞா்கள் தெரிவித்தனா். வியாழக்கிழமையும் இவா்களின் பணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com