தாயைக் கொலை செய்த மகன் கைது
By DIN | Published On : 07th January 2021 08:47 AM | Last Updated : 07th January 2021 08:47 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே தாயைக் கொலை செய்த மகனை காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.
திருமானூா் அருகிலுள்ள சன்னாவூரைச் சோ்ந்த வைரம் மனைவி தனம்(70). பல ஆண்டுகளுக்கு முன்பே கணவா் இறந்து விட்டதால், மகன் உதயகுமாருடன்(47) தனம் வசித்து வந்தாா். இந்நிலையில் அவா்களிடையே சொத்துப் பிரிப்பு தொடா்பாக பிரச்னை இருந்து வந்தது.
கடந்த நவம்பா் மாதம் 29-ஆம் தேதி தனம் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டதாக, வெங்கனூா் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினா் சடலத்தை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு காவல்துறையினருக்கு கிடைத்த மருத்துவ அறிக்கையில், தனம் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து உதயகுமாரை வெங்கனூா் காவல் நிலையத்துக்கு அழைத்து காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டனா். அவா் தாய் தனத்தை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, வாயில் விஷத்தை ஊற்றி தற்கொலை செய்துக் கொண்டதாக நாடகமாடியதாக ஒப்புக்கொண்டாா். இதையடுத்து ா் தற்கொலை வழக்கை கொலை வழக்காக காவல்துறையினா் மாற்றி உதயகுமாரை கைது செய்தனா்