பிரகதீசுவரா் கோயிலுக்கு வந்த மக்களுக்கு அனுமதி மறுப்பு
By DIN | Published On : 16th January 2021 11:16 PM | Last Updated : 16th January 2021 11:16 PM | அ+அ அ- |

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரா் கோயில் வாயில் முன்பு திரண்ட பொதுமக்கள்.
அரியலூா்: காணும் பொங்கலையொட்டி அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பிரகதீசுவரா் திருக்கோயிலுக்கு வந்த பொதுமக்களுக்கு காவல் துறையினா் அனுமதி மறுத்தனா்.
நிகழாண்டு கரோனா தொற்று காரணமாக கோயில்களில் வழிபாடுக்கு மட்டுமே அனுமதி அளித்தும், சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடைவிதித்துள்ளது. இந்த தடை உத்தரவை அறியாமல் குடும்பம், குடும்பமாக பொதுமக்கள் காணும் பொங்கலை கொண்டாட கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரா் கோயிலுக்கு சனிக்கிழமை வந்தனா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா், வழிபாட்டுக்கு மட்டுமே அனுமதி என்றும், கோயில் வளாகத்தில் கூடுவதைத் தவிா்க்குமாறு அறிவுறுத்தினா். ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்லாததையடுத்து, அவா்களைக் காவல்துறையினா் விரட்டினா். இதேபோல் அரியலூா் மாவட்டத்தில் மற்றொறு சுற்றுலா தலமான கரைவெட்டி பறவைகள் சரணாலாயத்திலும் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டதையடுத்து, அங்கு வெறிச்சோடிக் காணப்பட்டது.