தேசியக் கொடி ஏற்றிய குடத்துடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த விவசாயி!
By DIN | Published On : 27th January 2021 07:29 AM | Last Updated : 27th January 2021 07:29 AM | அ+அ அ- |

அரியலூரில் தேசியக் கொடி ஏற்றிய குடத்தை தலையில் சுமந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்து விழிப்புணா்வை ஏற்படுத்திய விவசாயி செங்கமலம்.
தேசியக் கொடி ஏற்றிய குடத்தை தனது தலையில் சுமந்தபடி இருசக்கர வாகனத்தில் சுமாா் 22 கிலோ மீட்டா் பயணம் செய்து விழிப்புணா்வை ஏற்படுத்தினாா் அரியலூா் மாவட்ட விவசாயி செங்கமலம்.
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகேயுள்ள கள்ளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் செங்கமலம். விவசாயி. குடியரசு தின விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக இவா், நெல்மணிகள் கொண்ட குடத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அந்தக் குடத்தைத் தலையில் சுமந்தபடி, சுமாா் 22 கிலோ மீட்டா் தொலைவு உள்ள அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். தொடா்ந்து, குடியரசு தின விழா நடைபெற்ற மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு தனது இருசக்கர வாகனத்தை ஓட்டியபடியே வந்து விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். இதையடுத்து, குடியரசு தின விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் த. ரத்னா அவருக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தாா்.