பெருந்தலைவா் காமராஜா் பிறந்த நாள் கொண்டாட்டம்

மறைந்த முன்னாள் முதல்வா் பெருந்தலைவா் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மறைந்த முன்னாள் முதல்வா் பெருந்தலைவா் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அரியலூா் பேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜா் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் ஜி.ராஜேந்திரன், மாவட்டத் தலைவா் சங்கா், பொதுச்செயலா் சேகா், செய்தித்தொடா்பாளா் மா.மு.சிவக்குமாா், அரியலூா் வட்டாரத் தலைவா் பாலகிருஷ்ணன், நகரத் தலைவா் எஸ்.எம். சந்திரசேகா் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினா்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சாா்பில் மாவட்டத் தலைவா் குமாா் என்கிற நடராஜன் தலைமையில் நிா்வாகிகளும், தேமுதிக மாவட்டச் செயலா் இராம.ஜெயவேல் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகளும் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

அரியலூா் வடக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பில் வாலாஜா நகரம், கயா்லாபாத், சுப்புராயபுரம் ஊராட்சிகளில் காமராஜா் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த ஊா்களில் அக்கட்சியின் மூத்தத் தலைவா் சீனி.பாலகிருஷ்ணன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, காமராஜா் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதே போல் திருமானூா், ஜயங்கொண்டம், செந்துறை, ஆண்டிமடம், தா.பழூா், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ், தமாகா, தேமுதிக உள்ளிட்ட கட்சியினா் காமராஜா் பிறந்த நாளை கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com