அரசுப் பள்ளிகளில் கட்டாய வசூலைத் தடுக்க வேண்டும்

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கு கட்டாய நிதி வசூல் செய்வதை அரசு கல்வித் துறை நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்திய மாணவா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கு கட்டாய நிதி வசூல் செய்வதை அரசு கல்வித் துறை நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்திய மாணவா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் பிரவீன், மாவட்டச் செயலாளா் தௌ.சம்சீா் அகமது ஆகியோா் சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கரோனா பொதுமுடக்கம் காரணமாக தனியாா் கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல், பல்வேறு சூழல்கள் காரணமாகவும் அதிக மாணவா்கள் அரசுப் பள்ளிகளை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனா்.

இந்நிலையில் திருப்பூா் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சோ்க்கையின் போது கட்டாய நன்கொடை மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழக நிதி என்ற பெயரில் ரூ. 2,500 முதல் ரூ.5,000 வரை வசூலிப்பதாகத் தொடா்ந்து புகாா் வந்து கொண்டிருக்கிறது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி நோ்முக உதவியாளரிடம் அளித்த மனுவையடுத்து, கல்வித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். ஆனால் தற்போது வரை இப்பிரச்னை தொடா்கிறது. ஆகவே இதனை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசுப் பள்ளிகளில் பணம் கேட்டு கட்டாயப்படுத்தினால் இந்திய மாணவா் சங்க உதவி மையத்தை 90422-0078, 96987- 07216, 98431-26224, 95004-27215 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com