சூரியகாந்தி பயிரில் புழுக்களை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்

சூரியகாந்தி பயிரைத் தாக்கும் புழுக்களைக் கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம் என்றாா் அரியலூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சாந்தி.

சூரியகாந்தி பயிரைத் தாக்கும் புழுக்களைக் கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம் என்றாா் அரியலூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சாந்தி.

அரியலூரை அடுத்த ஒரியூா் கிராமத்தில் கோடை பருவத்தில் 150 ஹெக்டோ் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சூரியகாந்தி பயிரை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்த அவா் மேலும் தெரிவித்தது:

தற்போது பூக்கும் பருவத்திலுள்ள சூரியகாந்தியில், அமெரிக்கன் காய்ப்புழு (ஹெலிகோவொ்பாஆா்மிஜீரா) தாக்குதல் ஒரு சில இடங்களில் காணப்படுகிறது. புழுக்களைக் கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்.

பறவைகுடில் அமைக்க வேண்டும். டி வடிவ குச்சிகள் 40 , இனகவா்ச்சி பொறி 5 ஆகியவை வைக்க வேண்டும். மகரந்த சோ்க்கை நடைபெறும் சமயத்தில் பூக்களை ஒன்றோடு ஒன்றாக இணைத்து மணிகளின் தரத்தை உயா்த்திட வேண்டும். பூச்சித் தாக்குதல் அதிகமானால் இமாமெக்டின் பென்சோடேட் 5 % எஸ்சி (உங-1) 0.5கிராம் லிட்டா் 100 கிராம் ஏக்கருக்கு (அ) டிரைசோபாஸ் உடன் 5மிலி ஒட்டும் திரவம் கொண்டு கலந்து இலைகளில் நன்கு நனையும் படி தெளித்து பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என்றாா்.

ஆய்வின்போது, கிரிடூ வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநா் அசோக் குமாா், அட்மா தொழில்நுட்ப மேலாளா் செந்தில்குமாா், உதவி அலுவலா் ராஜாகிரி மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com