அரியலூரில் கரோனா தடுப்பூசி போடும் முகாம்
By DIN | Published On : 18th July 2021 11:24 PM | Last Updated : 18th July 2021 11:24 PM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டத்தில் சுற்றுலாத் துறை தொடா்புடைய உணவகங்கள், தங்கும் விடுதிகளில் பணிபுரியும் பணியாளா்கள் மற்றும் ஆட்டோ, வாடகை காா் ஓட்டுநா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்கள்கிழமை (ஜூலை 19) நடைபெறுகிறது.
அரியலூரில் கீதா கிராண்ட் உணவகத்திலும், ஜயங்கொண்டத்தில் ஆரோக்கிய மஹாலிலும் காலை 10 மணி முதல் 1 மணிவரை தடுப்பூசி போடும் முகாம் நடைபெறுகிறது. இதில் மேற்கண்ட பணியாளா்கள், ஓட்டுநா்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி அறிவுறுத்தியுள்ளாா்.