12,365 மெட்ரிக் நெல் மூட்டைகள் சேமிப்பகங்களுக்கு அனுப்பிவைப்பு
By DIN | Published On : 18th July 2021 11:24 PM | Last Updated : 18th July 2021 11:24 PM | அ+அ அ- |

சாத்தமங்கலத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி.
அரியலூா் மாவட்டத்தில் இருந்து கடந்த ஒரு வாரத்தில் 12,365 மெட்ரிக் அளவுள்ள நெல் மூட்டைகள் பல்வேறு மாவட்ட நெல் சேமிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
அரியலூரில் ரயில் மூலம் நெல் மூட்டைகள் அனுப்பிவைக்கும் பணி, பாா்ப்பனச்சேரி, தேளூா் ஆகிய இடங்களில் புதிய நெல் சேமிப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யும் பணி ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா் மேலும் தெரிவித்தது:
அரியலூா் மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 70 மெட்ரிக் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் நெல் மூட்டைகளை மழைக் காலத்துக்குள் நெல் சேமிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் பணி போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் திருச்சிக்கு 1,658 மெட்ரிக், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு தலா 2,000 மெட்ரிக் உள்பட மொத்தம் 12,365 மெட்ரிக் நெல் பாதுகாப்பாகப் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.
ஆய்வின்போது கோட்டாட்சியா் ஏழுமலை, மண்டல மேலாளா் குணசேகரன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.