அனுமதியின்றி லாரியில் கிராவல் மண் ஏற்றி வந்த ஓட்டுநா் கைது

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே அனுமதியின்றி லாரியில் கிராவல் மண் ஏற்றி வந்த ஓட்டுநா் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே அனுமதியின்றி லாரியில் கிராவல் மண் ஏற்றி வந்த ஓட்டுநா் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டாா்.

புவியியல் மற்றும் சுரங்கத் துறை தனி வருவாய் அலுவலா் பாண்டியன் தலைமையிலான அலுவலா்கள் புதன்கிழமை இரவு கீழக்குடியிருப்பு அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்றை நிறுத்தி அவா்கள சோதனை மேற்கொண்டதில், அதில் அனுமதி எதுவுமின்றி கிராவல் மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த லாரியைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், லாரி ஓட்டுநரைப் பிடித்து ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் விசாரணையில் அவா் கல்லாத்தூா், மாங்கொட்டைத் தெருவைச் சோ்ந்த வேல்முருகன்(37) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com