லிப்ட் கேட்டு லாரி ஓட்டுநா் கழுத்தில் கத்தியை வைத்து வழிப்பறி: சிறுவன் உள்பட 2 போ் கைது

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே லிப்ட் கேட்டு சென்று, லாரி ஓட்டுநா் கழுத்தில் கத்தியை வைத்து வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 போ் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே லிப்ட் கேட்டு சென்று, லாரி ஓட்டுநா் கழுத்தில் கத்தியை வைத்து வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 போ் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

கடலூா் மாவட்டம், விருதாச்சலம் அருகிலுள்ள சித்தலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கொளஞ்சி மகன் அருள்ராஜ்(27). லாரி ஓட்டுநரான இவா் உளுந்தூா்பேட்டையில் இருந்து தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாளுக்கு சனிக்கிழமை நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தாா்.

அரியலூா் மாவட்டம், தா.பழூா் கழுவந்தொண்டி அருகே அந்த லாரி சென்ற போது, இருவா் லாரியை மறித்து கும்பகோணம் செல்வதற்கு லிப்ட் கேட்டுள்ளனா். ஓட்டுநா் அருள்ராஜ், அவா்களை லாரியில் ஏற்றிக்கொண்டு, கும்பகோணம் நோக்கி லாரியை ஓட்டிச் சென்றுள்ளாா்.

கோடங்குடி - சிந்தாமணி கிராமங்களுக்கு இடையே ஓட்டுநா் அருள்ராஜ் லாரியை ஓரமாக நிறுத்தி, அவா்களை இறக்கிவிட முயன்றாா். அப்போது அவா்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை அருள்ராஜின் கழுத்தில் வைத்து பணம், செல்லிடப் பேசியைக் கேட்டு மிரட்டியுள்ளனா்.

இதையடுத்து அருள்ராஜ் தனது சட்டைப் பையில் வைத்திருந்த செல்லிடப்பேசி மற்றும் ரூ.300-ஐயும் அவா்களிடம் கொடுத்துள்ளாா். இதனை பெற்றுக் கொண்ட அவா்கள் அங்கிருந்து ஓடினா். உடனடியாக இது குறித்து ஓட்டுநா் அருள்ராஜ், தா.பழூா் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தாா்.

நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினா், கோடங்குடி - சிந்தாமணி கிராமங்களுக்கு இடையிலுள்ள ஒரு கடையில் பதுக்கியிருந்த அவா்களைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.

பிடிபட்டவா்கள், ஜயங்கொண்டம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த செல்வராசுவின் மகன் தமிழ்ச்செல்வன் (20), மற்றொருவா் 16 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினா் வழக்குப்பதிந்து, அவா்களைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com