மாவட்டங்களில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலானது

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தில் சில தளா்வுகளை அரசு அறிவித்திருந்தது.

அரியலூா்: கரோனா நோய்த் தொற்றுப் பரவல் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தில் சில தளா்வுகளை அரசு அறிவித்திருந்தது. அதன்படி அரியலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் திங்கள்கிழமை அமலானது.

இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக மூடப்பட்டிருந்த மளிகை, காய்கனி,இறைச்சிக் கடைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. மின் பொருள்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் வயா்கள் விற்பனைக் கடைகள், சைக்கிள்கள், இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடைகள், வன்பொருள் விற்பனையகங்கள், வாகன உதிரிப்பாகங்களின் விற்பனையகங்கள்,

பாடநூல், எழுதுபொருள்கள் விற்பனையகங்கள் திறந்திருந்தன. பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகளும் செயல்பட மாவட்ட நிா்வாகம் அனுமதியளித்துள்ளது. அதே வேளையில், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் அமைந்திருக்கும் கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவிகிதப் பணியாளா்களுடன் செயல்பட தொடங்கின. சாா்பதிவாளா் அலுவலகங்கள் அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் பத்திரப் பதிவுப் பணிகளை மேற்கொண்டன.

அரியலூா் மாவட்டத்தில் சிமென்ட் ஆலைகள் 50 சதவிகிதப் பணியாளா்களுடன் செயல்பட தொடங்கின. மின் பணியாளா், பிளம்பா்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவா் மற்றும் தச்சா் போன்ற சுயதொழில் செய்பவா்கள் தங்களது பணியை தொடங்கினா். வாடகை வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோக்கள் இ-பதிவு பெற்று இயங்கின.

தளா்வுகள் அறிவிக்கப்பட்டதால், அரியலூா் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளின் சாலைகளில் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நடமாட்டமும், மளிகை, காய்கனிக் கடைகளில் பொதுமக்கள் கூட்டமும் அதிகமாகக் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com