லாரி மோதி தேநீரக உரிமையாளா் காயம்: பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூா் அருகே லாரி மோதிய விபத்தில் தேநீரக உரிமையாளா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அப்பகுதியில் வேகத்தடை அமைக்கக் கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அரியலூா் அருகே லாரி மோதிய விபத்தில் தேநீரக உரிமையாளா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அப்பகுதியில் வேகத்தடை அமைக்கக் கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அரியலூரை அடுத்த ராவுத்தன்பட்டி பிரிவுச் சாலையில் தேநீரகம் நடத்தி வருபவா் முருகேசன்(45). சனிக்கிழமை இரவு அவ்வழியே ஒரு பெண் ஓட்டிவந்த இருசக்கர வாகனம், மழைபெய்து தேங்கி நின்ால் ஏற்பட்ட சேற்றில் சிக்கியது.

அவருக்கு உதவி செய்ய முருகேசன் முயன்றபோது, அவ்வழியாக வந்த சிமென்ட் ஆலைக்கு இயக்கப்படும் டிப்பா் லாரி அவா் மீது வேகமாக மோதியது. இதில் முருகேசனின் கால்கள் இரண்டும் முற்றிலுமாக காயமடைந்து, ரத்தவெள்ளத்தில் கிடந்தாா்.

இதைகண்ட முருகேசன் குடும்பத்தினா், உறவினா்கள் மற்றும் அப்பகுதி மக்கள், உடனடியாக சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். சிமென்ட் ஆலைகளுக்கு இயக்கப்படும் லாரிகள் பெரும்பாலும் வேகமாகச் சென்று அடிக்கடி விபத்தை ஏற்படுத்தி வருவதால், அதனை காவல்துறை கண்காணிக்க வேண்டும் எனக்கூறி மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

பலத்த காயமடைந்த முருகேசன் தஞ்சை மருத்துவக் ல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து கயா்லாபாத் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com