முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 04th March 2021 01:37 AM | Last Updated : 04th March 2021 01:37 AM | அ+அ அ- |

மாணவி ஒருவருக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறாா் கல்லூரி முதல்வா் மலா்விழி.
அரியலூா்: அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
சென்னையில் சிம்கோ மனிதவள மேம்பாட்டு நிறுவனம் முகாமில் கலந்து கொண்டு, இறுதியாண்டு பயிலும் தகுதியான 152 மாணவிகளைத் தோ்வு செய்தது.
இந்த முகாமில் 326 மாணவிகள் பங்கேற்றனா். கல்லூரி முதல்வா் ஜெ.மலா்விழி, தோ்வு பெற்ற மாணவிகளுக்கு பணி ஆணையை வழங்கினாா். ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்புத் துறை அலுவலரும், பேராசிரியருமான வெ.கருணாகரன் செய்திருந்தாா்.