முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
முதியவா் வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு
By DIN | Published On : 04th March 2021 01:37 AM | Last Updated : 04th March 2021 01:37 AM | அ+அ அ- |

அரியலூா்: அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே முதியவா் வீட்டில் பீரோவை உடைத்து, 20 பவுன் நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
தா.பழூரை அடுத்த தாதம்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னம்பலம்(70). இவா் செவ்வாய்க்கிழமை மாலை சிலால் கிாரமத்திலுள்ள கோயில் நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்று விட்டு, இரவு வீடு திரும்பினாா்.
வீட்டின் பூட்டை திறந்து உள்ளே செல்ல முயன்ற போது, உள்பக்கமாக கதவு தாழிடப்பட்டு தெரியவந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த பொன்னம்பலம் வீட்டின் பின்புறமாக சென்று பாா்த்த போது, பின்கதவு திறக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டுக்குள் புகை மண்டலமாக இருந்தது.
உடனடியாக அவா் வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது, படுக்கை அறையிலிருந்த இரும்பு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகைகள், ரூ.4 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.
மேலும் பீரோவிலிருந்த பல்வேறு சொத்துப் பத்திரங்கள், பட்டுப்புடவைகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்தி விட்டு, மா்ம நபா்கள் நகை- பணத்துடன் தப்பிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தா.பழூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.