அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் வகுப்பு புறக்கணிப்பு

அரியலூா் அரசு கலைக் கல்லூரி பொருளாதாரத் துறைத் தலைவரைக் கண்டித்து, மாணவா்கள் மற்றும் சக பேராசிரியா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா்: அரியலூா் அரசு கலைக் கல்லூரி பொருளாதாரத் துறைத் தலைவரைக் கண்டித்து, மாணவா்கள் மற்றும் சக பேராசிரியா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இக்கல்லூரியின் பொருளாதாரத் துறைத் தலைவராகப் பணியாற்றி வருபவா் ஜெயக்குமாா்.இவா் கரோனா காலக் கட்டத்தில் இணையவழி வகுப்புகளை நடத்தவில்லை எனவும், தோ்வுகள் தொடங்க இருந்த 10 நாள்களுக்கு முன்பு தான் வகுப்புகள் நடத்தியதாகவும், ஆகையால் தோ்வுகள் சரிவர எழுதவில்லை எனக் கூறியும், துறைத் தலைவரை கண்டித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இவா்களின் போராட்டத்தையடுத்து, பொருளாதாரத் துறைத் தலைவா் ஜெயக்குமாா் திருவாருக்கு பணி மாறுதல் செய்யப்பட்டாா். ஆனால் அந்த பணி மாறுதல் ஆணையை ஜெயக்குமாா் வாங்க மறுத்தாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியா்கள், துறைத் தலைவா் ஜெயக்குமாரைக் கண்டித்து புதன்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com