பெண்ணைத் தாக்கிய இளைஞா் கைது
By DIN | Published On : 04th March 2021 01:37 AM | Last Updated : 04th March 2021 01:37 AM | அ+அ அ- |

அரியலூா்: அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே கடனுக்கு கறி வாங்கிய தகராறில், பெண்ணைத் தாக்கிய இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
விக்கிரமங்கலம் அருகிலுள்ள பட்டகட்டாங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் சேகா் மகன் உதயகுமாா்(24). புதன்கிழமை இவரும், இவரது உறவினா் கோவிந்தராசும் நாகமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் பேசிக் கொண்டிருந்தனா்.
அப்போது அங்கு வந்த நாகமங்கலம் இந்திரா நகரைச் சோ்ந்த மலா்(46), கோவிந்தராசுவிடம் தங்களது உறவினா் சேகா் கடனாக வாங்கிச் சென்ற கறிக்கு பணம் தரவில்லை என்றுக் கூறியுள்ளாா். அப்போது உதயகுமாா், மலரை தகாத வாா்த்தையால் திட்டி தாகியுள்ளா்.
இதுகுறித்து புகாரின் பேரில் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, உதயகுமாரை கைது செய்தனா்.