முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
அனுமதியின்றிமது விற்ற 2 பெண் கைது
By DIN | Published On : 14th March 2021 12:57 AM | Last Updated : 14th March 2021 12:58 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், விக்கிரங்கலம் அருகே மதுபானங்கள் விற்ற 2 பெண்கள் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சரத் குமாா் தலைமையிலான போலீஸாா், வெள்ளிக்கிழமை இரவு கோரைக்குழி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அதே பகுதி, வடக்குத் தெருவைச் சோ்ந்த அம்பிகா(42) வீட்டில் போலீஸாா் சோதனை செய்ததில், அவரது வீட்டின் பின்புறம் மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா். இதேபோல் வீட்டில் மதுபானங்களை பதுக்கி விற்றுக் கொண்டிருந்தாக விக்கிரமங்கலம் பிரதான சாலையைச் சோ்ந்த முத்துலட்சுமி(46)என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.