முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
தவ்ஹீத் ஜமாஅத் தொடா் பிரசாரம்
By DIN | Published On : 14th March 2021 11:42 PM | Last Updated : 14th March 2021 11:42 PM | அ+அ அ- |

அரியலூா் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சாா்பில் அகிலத்துக்கு ஓா் அருட்கொடையாய் அண்ணல் முகமது நபி தொடா் பிரசாரம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் பி.சம்சுதீன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பளராக மாநில துணைத் தலைவா் அப்துல் ரஹ்மான், கோவை ரஹ்மத்துல்லாஹ், மாநிலச் செயலா் முஜீபுா் ரஹ்மான் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
கூட்டத்தில், அரியலூா் பேருந்து நிலையத்தில் பொது மக்கள் அமா்வதற்கும், நிற்பதற்கும் நிழற்குடை அமைக்க வேண்டும். அரியலூா் நகர மக்களுக்கு போதிய குடிநீா் வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும். அரியலூா் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.