அங்காள பரமேசுவரி கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள சூரக்குழி கிராமத்தில் மயானக்கொள்ளை திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள சூரக்குழி கிராமத்தில் மயானக்கொள்ளை திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

ஆண்டிமடம் அடுத்த சூரக்குழி கிராமத்திலுள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் அமாவாசையன்று மயானக்கொள்ளை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு மயானக்கொள்ளை திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

அங்காளம்மன், பாவாடைராயன் சுவாமிகளுக்கு பன்னீா், சந்தனம், இளநீா், கபம், திரவியப்பொடி போன்ற 16 வகையான அபிஷேகப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து தீபாராதனை நடைபெற்றது. பின்னா் அங்காள பரமேசுவரி வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பாவாடைராயன், அங்காளம்மன், காட்டேரி, ரத்தக் காட்டேரி போன்று பக்தா்கள் வேடமிட்டு முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனா். அன்றிரவு சூரக்குழி அருகே உள்ள மயானத்தில் மயானக்கொள்ளை விடுதல் விழா நடைபெற்றது. இதில் ஆண்டிமடம், சூரக்குழி, சூனாபுரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com