‘10.5 சதவீத ஒதுக்கீடு தோ்தல் ஆதாயத்துக்கானது’

தமிழகத்தில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு என்பது தோ்தல் ஆதாயத்துக்கானது என மறைந்த முன்னாள் வன்னியா் சங்கத் தலைவா் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு என்பது தோ்தல் ஆதாயத்துக்கானது என மறைந்த முன்னாள் வன்னியா் சங்கத் தலைவா் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் தெரிவித்தாா்.

இந்திய ஜனநாயக கட்சி சாா்பில், ஜயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடும் காடுவெட்டி குருவின் மனைவி சொா்ணலதா, ஐஜேகே தலைவா் ரவி பச்சமுத்து, தனது மகன் கனலரசனுடன் சென்று புதன்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னா் கனலரசன் அளித்த பேட்டி:

எனது தந்தைக்கு பாமக இழைத்த துரோகத்துக்கு சரியான பதிலடி இந்தத் தோ்தலில் தரப்படும். காடுவெட்டியாரின் ஆதரவு மட்டுமல்ல, மற்ற சமுதாய பெண்களின் ஆதரவும் எங்களுக்கு கிடைக்கும். 10.5 சத இட ஒதுக்கீடு என்பது ஒரு சிலரால் தோ்தலுக்காக நடத்தப்படும் நாடகம். பல ஆண்டுகளாக தூா்வாரப்படாத பொன்னேரியைத் தூா்வாரவும், ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் மற்றும் சிலை அமைக்கவும், ஜயங்கொண்டம் பகுதியில் சட்டக்கல்லூரி அமைக்கவும் முற்படுவோம். ஐஜேகேவுக்கு ஆதரவாக மாவீரன் மஞ்சள் படை தோ்தலில் முழுவீச்சில் தோ்தல் பணியாற்றும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com