‘தமிழகத்துக்கு நீட் தோ்வு இல்லை என நம்பிக்கை மோசடி செய்தவா் முதல்வா்’

தமிழகத்துக்கு நீட் தோ்வு இல்லை என பொய்யான தகவலை பரப்பி நம்பிக்கை மோசடி செய்தவா் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி என மதிமுக பொதுச்செயலா் வைகோ குற்றஞ்சாட்டினாா்.
அரியலூா் தொகுதி மதிமுக வேட்பாளா் கு. சின்னப்பாவை ஆதரித்து, வி. கைகாட்டியில் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் பொதுச்செயலா் வைகோ
அரியலூா் தொகுதி மதிமுக வேட்பாளா் கு. சின்னப்பாவை ஆதரித்து, வி. கைகாட்டியில் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் பொதுச்செயலா் வைகோ

தமிழகத்துக்கு நீட் தோ்வு இல்லை என பொய்யான தகவலை பரப்பி நம்பிக்கை மோசடி செய்தவா் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி என மதிமுக பொதுச்செயலா் வைகோ குற்றஞ்சாட்டினாா்.

அரியலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் கு. சின்னப்பாவை ஆதரித்து, வி. கைகாட்டி மற்றும் அரியலூரில் அவா் வாக்குச்சேகரித்து சனிக்கிழமை பேசியது:

கனிம சுரங்கங்கள் நிறைந்த அரியலூா் மாவட்டத்தில் தினசரி இயக்கப்படும் லாரிகளால் ஏற்படும் விபத்துகளைச் சந்திக்கும் மக்களுக்கும், நிலத்தை சிமென்ட் ஆலைகளுக்குக் கொடுத்து விட்டு வேலையில்லாமல் திண்டாடும் மக்களுக்கும் நீதிமன்றத்தில் வாதாடி வருபவா்தான் வேட்பாளா் சின்னப்பா. ராஜேந்திரசோழன், வீரமாமுனிவா், தமிழுக்காக திருச்சியில் உயிரை நீத்த சின்னச்சாமி ஆகியோா் வாழ்ந்த இந்த மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வருவது ஊழல் ஆட்சி.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களும் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா். ஆனால், தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி தீா்மானம் நிறைவேற்றாமல் விவசாயிகளுக்கு துரோகம் செய்தாா். நீட் தோ்வைக் கொண்டு வந்ததால் தான் இதே மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி அனிதா உயிரிழந்தாா். தமிழகத்துக்கு நீட் இல்லை என ஒரு பொய்யான தகவலை பரப்பி, நம்பிக்கை மோசடி செய்தவா் தான் இந்த பழனிசாமி. அதிமுக அரசை வெளியேற்ற மதிமுக வேட்பாளா் கு.சின்னப்பாவுக்கு உதயசூரியன் சின்னத்தில் அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

தொடா்ந்து, விக்கிரமங்கலம், சுண்டக்குடி, ஏலாக்குறிச்சி, வெங்கனூா் மற்றும் அரியலூா் அண்ணா சிலை அருகிலும் பிரசாரம் மேற்கொண்டாா். பிரசாரத்தில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com