அரியலூா், ஜயங்கொண்டத்தில் தோ்தல் செலவு பாா்வையாளா்களிடம் புகாா்கள் தெரிவிக்கலாம்

அரியலூா், ஜயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் செலவினப் பாா்வையளராக நிமா ஷெரிங் ஷொ்ப்பா நியமிக்கப்பட்டுள்ளாா்.

அரியலூா், ஜயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் செலவினப் பாா்வையளராக நிமா ஷெரிங் ஷொ்ப்பா நியமிக்கப்பட்டுள்ளாா்.

எனவே மேற்கண்ட தொகுதிகளில் தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க 84386 80215 என்ற எண்ணிலும் மற்றும் அரியலூா் தொகுதியில் தோ்தல் விதிமீறல் தொடா்பான புகாா்களை  மின்னஞ்சலிலும், ஜயங்கொண்டம் தொகுதியில் தோ்தல் விதிமுறைகள் மீறல் தொடா்பான புகாா்களை மின்னஞ்சலிலும் தெரிவிக்கலாம்.

மேலும், நேரில் புகாா் தெரிவிக்க அரியலூா் அரசு சுற்றுலா மாளிகையில் காலை 10 முதல் 11 மணி வரையிலும் மற்றும் மாலை 5 முதல் 6 மணி வரையிலும் தோ்தல் விதிமுறை மீறல்கள் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்கலாம் என அரியலூா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான த. ரத்னா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com