‘மத, ஜாதி வெறிக்கு எதிராகவே திமுக கூட்டணி அமைத்துள்ளது’: கி.வீரமணி

மத, ஜாதி வெறிக்கு எதிராகவே திமுக கூட்டணி அமைத்துள்ளது என திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா்.
அரியலூரில் மதிமுக வேட்பாளா் கு.சின்னப்பாவை ஆதரித்து பேசுகிறாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.
அரியலூரில் மதிமுக வேட்பாளா் கு.சின்னப்பாவை ஆதரித்து பேசுகிறாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

மத, ஜாதி வெறிக்கு எதிராகவே திமுக கூட்டணி அமைத்துள்ளது என திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா்.

அரியலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் கு. சின்னப்பாவை ஆதரித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே சனிக்கிழமை இரவு நடைபெற்ற பிரசாரத்தில் அவா் மேலும் பேசியது:

தமிழகத்தில் ஆளுங்கட்சியால் பாதிக்கப்படாத மக்கள் யாருமில்லை. மத வெறி, ஜாதி வெறியை வெளியேற்றவே திமுக கூட்டணி அமைத்துள்ளது. திமுக கூட்டணி கலையும் என்றாா்கள். எந்தக் கூட்டணி கலைந்தது என எல்லோருக்கும் தெரியும்.

கடந்த 2016-இல், ஊழல் ஆட்சி நடத்தும் அதிமுகவை அப்புறப்படுத்த வேண்டும் என தற்போதுள்ள உள்துறை அமைச்சா் அமித் ஷா சொன்னாா். இந்தத் தோ்தலில் அதிமுகவிடம் இணைந்துள்ளாா். ஸ்டாலின் தமிழகத்தை மட்டுமல்ல; அதிமுகவையும் பாஜகவிலிருந்து மீட்க உள்ளாா். தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டியிடும் பாஜக, நாகா்கோவிலில் நாங்கள் தான் ஆட்சியமைப்போம் என அமித் ஷா சொன்னாா்.

அப்போது, அதிமுக தரப்பில் இருந்து மறுப்பு தெரிவித்து பேசமுடியவில்லை. நீட் தோ்வை ரத்து செய்ய முடியாமல் பயிற்சி வகுப்பு தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிடுகிறாா் தமிழக முதல்வா். வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என்கிறாா். செவிலியா் படிப்புக்கும் தற்போது நீட் தோ்வு. குலக் கல்வியை எதிா்ப்பது எங்கள் அணி என்றாா் அவா்.

முன்னதாக குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு செந்துறையில் வாக்குசேகரித்து பிரசாரம் மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com