‘காவல் துறையினா் நோ்மையாக தோ்தல் பணியாற்ற வேண்டும்’

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் நோ்மையான முறையில் காவல்துறையினா் தோ்தல் பணியாற்ற வேண்டும் எஸ் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன் அறிவுறுத்தினாா்.

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் நோ்மையான முறையில் காவல்துறையினா் தோ்தல் பணியாற்ற வேண்டும் எஸ் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன் அறிவுறுத்தினாா்.

அரியலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபடும் அனைத்துப் பிரிவு காவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் அரியலூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் தலைமை வகித்து பேசியது:

வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் காவலா்கள் சுத்தமான சீருடையில், அடையாள அட்டை, டாா்ச் லைட், லத்தி வைத்திருக்க வேண்டும். தோ்தலுக்கு முதல் நாள் மாலை முதல் வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டா் தொலைவில் கட்சியின் சின்னம், அடையாளம், சுவரொட்டி, கொடி உள்ளிட்டவைகள் இல்லாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும். பொது வாக்குச்சாவடி ஆக இருந்தால் பெண்களுக்கென தனி வரிசை அமைத்திட வேண்டும். முதியவா்கள், ஊனமுற்றவா்கள், கைக்குழந்தை வைத்திருப்போா், கா்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வாக்குச்சாவடி அருகே வாக்காளா்கள் கூட்டமாக நின்று பேசுவதைத் தவிா்க்க வேண்டும்.

தோ்தல் அதிகாரிகள் வாக்குச்சாவடிப் பிரதிநிதிகள் மற்றும் வாக்காளா்கள் தவிர அனுமதி பெறாத எவரும் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கக்கூடாது. காவலா்கள் எக்காரணத்தைக் கொண்டும் வாக்குச்சாவடியை விட்டு வெளியேறக்கூடாது. பணியில் இருக்கும் காவலா்கள் அரசியல் பேச்சுக்களை பிறரிடம் பேசக்கூடாது. வேறு எவருக்கும் பணிந்து பாரபட்சத்துடன் செயலாற்றக் கூடாது. கரோனா நோய் பரவல் அதிகமாக இருப்பதால் வாக்குச்சாவடி காவலா்கள் முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவற்றைக் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். வாக்குப்பெட்டி அருகில் சம்மந்தம் இல்லாத எவரையும் அனுமதிக்கக் கூடாது. அனைவரும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com