நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சி வகுப்பு

அரியலூரில் வாக்குச்சாவடி நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூரில் வாக்குச்சாவடி நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூா் சட்டப் பேரவைத் தொகுயில் 44 இடங்களில் 94 பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கும், ஜயங்கொண்டம் தொகுதியில் 18 இடங்களில் 2 மிகப் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கும், 50 பதற்றமான வாக்குச்சாவடிகளும் பணியாற்றுவதற்காக 176 நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

அரியலூா் ஆட்சியா் த. ரத்னா தலைமை வகித்து, பயிற்சி வகுப்பைத் தொடக்கி வைத்து, வாக்குப்பதிவு நாளான்று பணியாற்ற உள்ள நுண் பாா்வையாளா்கள் அனைவரும், இந்தியத் தோ்தல் ஆணைய வழிக்காட்டுதலின் படி பணியாற்ற வேண்டும். வாக்குச் சாவடி மையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தாா்.

பயிற்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், மாவட்ட வழங்கல் அலுவலா் ரவிச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் பிரமிளா ஞானமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com