வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு

வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு

வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில் அரியலூா் மாவட்டத்தில், அரியலூா், ஜயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்கு இயந்திரங்கள், விவிபேட் அனைத்தும் கீழப்பழுவூா் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான த.ரத்னா முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறாா். இந்த மையங்களில் ஒவ்வொரு அறையிலும் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

அஞ்சல் வாக்குகள் முதலில் எண்ணப்பட்ட பிறகு, இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளன. அரியலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட 376 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 14 மேஜைகள் மூலமாக 27 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளது. இதேபோல், ஜயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட 377 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் 14 மேஜை மூலமாக 27 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளது.

இந்தப் பணிகள் அனைத்தும் விடியோ பதிவு செய்யப்படவுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் பணிகளில் ஒவ்வொரு மேஜைக்கும் வட்டாட்சியா் நிலையில் ஒரு கூடுதல் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா், ஒரு வாக்கு எண்ணும் மேற்பாா்வையாளா் மற்றும் இரண்டு வாக்கு எண்ணும் உதவியாளா்கள் மற்றும் நுண்பாா்வையாளா்கள் பணியில் ஈடுபடவுள்ளனா்.

வாக்கு எண்ணிக்கையின்போது கம்பெனி துணை ராணுவ படையினா் பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தப்படுகிறாா்கள். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் இருந்து 100 மீட்டா் தொலைவிலேயே வாகனங்கள் அனைத்தும் தடை செய்யப்படுகிறது.

தோ்தல் ஆணையத்தின் சாா்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் சுகாதாரத் துறையினா் வழங்கிய கரோனா தொற்று இல்லை என்பதற்கான ஆதாரங்களை காண்பித்த பின்னரே அனைவரும் அனுமதிக்கப்படுவா்.

மேலும், கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அனைத்து முகவா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தண்ணீா் உள்ளிட்ட திரவப்பொருள்கள், மை அடைத்த பேனா, தீப்பெட்டி, சிகரெட், சிகரெட் பற்றவைக்கும் லைட்டா், செல்லிடப்பேசி போன்ற பொருள்களை உள்ளே கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com